நெல்லையப்ப பிள்ளை1 nellaiyabbabiḷḷai, பெ.(n.)
திருநெல்வேலியைச் சேர்ந்த புலவர்; a poet in Tinnavéli.
சங்கரமூர்த்திப் பிள்ளையின் மகனாவார். இவர் பள்ளிக் கல்வியைப் பயின்று முடிந்த பின் தக்கார்பால் தமிழ்க் கல்வியினைக் கற்றார். இவர் திருநெல்வேலிப் புராணம் என்ற நூலினைப் பாடியுள்ளார். இந்நூலை இறைவன் அடியவர் வேடத்தில் வந்து இவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்கப் பாடப் பெற்றதாக ஒரு கதை வழங்குகிறது. இந்நூலினை, ஆசிரியர் நீலகண்ட சாத்திரி என்ற புலவரிடம் வடமொழி மான்மியத்தைப் பெற்றுத் தக்கார் பால் அதன் பொருளறிந்து தமிழில் இயற்றியுள்ளார். இப்புராணத்தில் 120 சருக்கங்களும் 6892 செய்யுட்களும் உள்ளன. நைமிசாரணியச் சிறப்பு, நகரச் சிறப்பு, அகத்தியர் வரவு, தக்கன் வேள்வி, திருநீற்றுப் பெருமை, ஐந்தெழுத்துப் பெருமை, சிவபூசை பெருமை, தொண்டர்கள் பெருமை, மகளிர் இலக்கணம், ஆசாரம், இல்லறம், துறவறம் முதலிய சிறப்புக்களும் பல வரலாற்றுச் செய்திகளும் உள்ளன.
நெல்லையப்ப பிள்ளை3 nellaiyabbabiḷḷai, பெ.(n.)
நெல்லையப்பகவிராயர் பார்க்க;see nellai-yappa-kavirayar.
இவர் திருநெல்வேலித் தலபுராணம், திருமலை சுப்பிரமணியர் தோத்திரம், தென் பழநியாண்டவர்
தோத்திரம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
நெல்லையப்ப பிள்ளை3 nellaiyabbabiḷḷai, பெ.(n.)
திருநெல்வேலியைச் சேர்ந்த புலவர்; a poet in Tinpavéli.
திருநெல்வேலிக்கு அருகேயுள்ள மாறாந்தை என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் இளங்கலை வரை கல்வி கற்று வட்டாட்சியராகப் பணியாற்றியவர். தமி ழ் நூல்களையும், சிவசமய நூல்களையும் கற்றுப் புலமை பெற்றவர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திலும், தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கத்திலும் தலைவராகப் பணியாற்றியவர். செந்தமி ழ் இதழாசிரியர் குழுவிலும் பணியாற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சிவகெண் முடிவைப் (சைவ சித்தாந்தைப்); பரப்பும் பணியில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர். திருக்குறளில் அமைந்துள்ள சிவசமய உண்மைகள் குறித்து ஆய்ந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். அருள் முறைத் திரட்டு உரை, திருவாசகத் திரட்டு உரை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.