நெல்லையப்ப கவிராச பண்டாரம்

நெல்லையப்ப கவிராச பண்டாரம் nellaiyabbagavirācabaṇṭāram, பெ.(n.)

   திருமலை யமகவந்தாதி பாடிய புலவர், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; author of Tirumalai Yamagavandati in 19th century.

தகப்பனார் முத்துக் குமாரசாமிக் கவிராசர், சொந்தவூர் திருநெல்வேலி. வாழ்ந்த காலம் 18321905. கவிராச நெல்லையப்ப பிள்ளை என்பது இவரின் மற்றொரு பெயராகும். இவர் முரா. கந்தசாமி க் கவிராயர், மு.ரா.அருணாசலாக் கவிராயர், கல்போத்துப் பிச்சுவையர், மேலகரம் கப்பிரமணியக் கவிராயர் முதலியவர்களிடம் கல்வி பயின்றவர். சந்திவிநாயகர் பதிகம், சந்திவிநாயகர் இரட்டை மணிமாலை, கப்பிரமணியர் தோத்திரம், சுப்பிரமணியர் பதிகம், பழனியாண்டவர் தோத்திரம், சோமசுந்தரரேசர் பதிகம், சுதர்ம சாரசங்கிரகம், கால்நடை மருத்துவ நூல், சந்தத் தமிழ்ப் பத்து ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.