நெல்லையப்பர்

 நெல்லையப்பர் nellaiyappar, பெ. (n.)

   பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர்; a poet in Pāņdianādu.

இவர் பாண்டிய நாட்டில் வீரவநல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். மேலைக் கொழுந்து மாமலைக் குமரன் பிள்ளைத் தமிழ், சுதந்திரப் பரணி, மகாத்மா காந்தியடிகள் வரலாறு, பழனியாண்டவர் பாராயணத்திரட்டு, எடப்பாடி ஆறுமுகசாமி கலம்பகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.