நெல்லெடை nelleḍai, பெ.(n.)
பொன் நிறுக்க வுதவுஞ் சிறிய எடை வகை; weight of a grain of paddy, used as a unit in weighing gold.
ஒரு நெல்லெடை = ஒரு வீசம் (கணக்கதி,பக்.23);.
[நெல் + எடை.]
நெல், நிறுத்தல் அளவு, நீட்டலளவு, முகத்தலளவு ஆகியவற்றிற்கு மூலப் பொருளாக அமைந்துள்ளது. 360 நெல் = 1 செவிடு; 5 செவிடு = ஒரு ஆழாக்கு. இது முகத்தலனவை. 8 எள்ளு=1 நெல்லு, 8 நெல்லு=1 விரற்கிடை – இது நீட்டளவை. (கணக்கதி.பக். 2122);.