நெல்லிவற்றல்

 நெல்லிவற்றல் nellivaṟṟal, பெ. (n.)

காய வைத்த நெல்லிக்காய். இது ஒரு கடைச்

   சரக்கு. இதில் துவர்ப்பு நீர் அதிக அளவில் இருப்பதால் அரத்த ஒழுக்குக் குணமாகும். இதைத் தண்ணில் ஊறப் போட்டு வைத்து அத்தண்ணிரை இறுத்துக் கண்ணோய்க்குப் பயன்படுத்தலாம்; the dried fruit of emblic myrobalan. It is a bazaar drug containing a large proportion of gallic acid and is therefore very useful in haemorrhage. It is immersed in water for a whole night and the infusion so obtained is used as collyrium in opthalmia. (சா.அக.);.

     [நெல்லி + வற்றல்]

துயில் நீங்கியவுடன் அதிகாலையில் நெல்லி வற்றல், தான்றி, கடுக்காய் ஊறியநீரில் சூடத்தைக் கரைத்துக் கண்ணைக் கழுவுவது தென்னாட்டுப் பழக்கம்.