திருநெல்லிக்கா எனத் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமையும் ஊர் இது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஊர் இது (150). சேக்கிழார் ஞானசம்பந்தர் செல்லும் வழியில் உள்ள கோயில்களைப் பணிந்து செல்லும் நிலையில், நெல்லிக்கா பணிந்து சென்றதையும் குறிப்பிடுகின்றார் (34.674-2) மேலும் பரமர் திருநெல்லிக்கா என்ற கூற்று இங்குள்ள சிவன் கோயில் பற்றிய தெளிவைப் பெற உதவுகிறது. நெல்லி மரங்கள் அடர்ந்த சோலை காரணமாக இப்பெயர் தோன்றியது எனல் பொருத்தமாக அமையும். தல மரம் நெல்லி என்பதும் இங்கு சுட்டத்தக்கது.