நெல்லிக்காய்

 நெல்லிக்காய் nellikkāy, பெ.(n.)

   தின்றபின் நீர் குடித்தால் இனிப்புச் சுவை தரும் பச்சை நிறச் சிறிய உருண்டை வடிவக் (நெல்லி மரத்தின்); காய்; the fruit of Indian goose berry – Emblica myrobalan. (சா.அக.);.

     [நெல்லி + காய்]

மஞ்சள் நிறமும் சதைப்பற்றும் மிக்க காய். இது புளிப்பும், துவர்ப்பும் உடையது. இக்காயை வடையாகவும், பச்சடியாகவும், துவையலாகவும் செய்து சாப்பிட குமட்டல் (வாந்தி);, தலை கற்றல், சளி, முதலிய நோய்கள் நீங்கும். இதன் வற்றல் சூடு, பித்த மயக்கம், ஒக்காளம் முதலிய நோய்கள் நீங்கும். பச்சை நெல்லிக்காயை அரைத்துத் தொப்புளின் கீழ்த் தடவ நீர்க்கட்டு உடையும். (சா.அக);.

     [P]