நெல்லிக்காய்மூட்டை

 நெல்லிக்காய்மூட்டை nellikkāymūṭṭai, பெ.(n.)

   ஒற்றுமையற்றவர்; a body of persons wanting in solidarity.

கலவரத்தால் நெல்லிக்காய் மூட்டை சிதறியது போல் கூட்டம் கலைந்து ஒடியது.

     [நெல்லி காய் + மூட்டை, மூட்டை = பொதி, உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு. நெல்லிக்காயை மூட்டையாக் கட்டினாலும் அவைகள் ஒன்றாகாது. தனித் தனியாகவே இருக்கும். அதுபோல ஒற்றுமை யற்றவர்கள் கூட்டமாக இருந்தாலும், அவர்களுள் ஒற்றுமை இல்லை. நெல்லிக்காய் கொட்டியதும் சிதறி ஒடுவதுபோல் ஒற்றுமை இல்லாமல் சிதறி ஒடுவர்.]