நெல்லிக்காய்க்கந்தகம் nelliggāyggandagam, பெ.(n.)
கந்தக வகை (வின்.);; a kind of Sulphur.
[நெல்லி காய் + கந்தகம். கந்தகம் = வெடி மருந்து. தீக்குச்சி செய்யப் பயன்படும் கார நெடியுள்ள மஞ்சள் நிறக் கனிமப்பொருள்.]
நெல்லிக் காயைப் போல் மஞ்சள் நிறமான கந்தகம். இது படிகாரத்தைப்போல் துண்டு துண்டுகளாகக் கிடைக்கும். மற்ற கந்தகங்களை விடத் தூய்மையானது. இது குட்டம், வல்லைக்கட்டி, வயிற்றுவலி, பெண்ணோய் முதலியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. (சா.அக.);.