நெல்லாயம்

நெல்லாயம் nellāyam, பெ. (n.)

   நெல்லாகக் கொடுக்கும் அரசிறை; revenue paid in paddy.

     “நாற்பாக் கெல்லைக்கும் உட்பட்ட கடமையும் பாடிகாவலும் சளிகையும் வெட்டிவரி கொள்வரியும் உட்பட்ட எப்பேற்பட்ட நெல்லாயங்களும்” (தெ.க.தொ.4.648);.

     [நெல் + ஆயம். ஆயம் = வரி, வருவாய், குடியிறை, கடமை]

நெல்லாயம் : அரசு நெல்லாகப் பெறும் வரி. தவசங்களை ஒரு இடத்திலிருந்து

மற்றோரிடத்திற்குச் சாலை வழியாகக் கொண்டு செல்லுங் காலத்தில் அதற்குரிய வரியை நெல்லாக அரசு பெறுவது. (கல்.அக.);.