நெல்லவல்

 நெல்லவல் nellaval, பெ. (n.)

   அரிசியவல்; pounded flat rice (flaked rice); obtained from fried paddy. (சா.அக.);.

     [நெல் + அவல். நெல்லை அவித்து நசுக்கி இடித்துப் பெறும்பொருள்.]

உள்ளத்தில் பள்ளம் விழுவதை அவலம் என்பர். அவல் + அம். அவித்த நெல்லை பள்ளமாய் இடித்துப் பெறுவதால் அவல் என்று பெயர். கவலை ஏற்றம் என்பது பள்ளநீர் ஏற்றுவது பற்றி வருவது போல் கவல் + ஐ மனக்கவலை குறிக்கும்.