நெல்குற்றுச்சாலை

 நெல்குற்றுச்சாலை nelkuṟṟuccālai, பெ.(n.)

   கோவிலில் படையலுக்கு வேண்டிய நெல்லைக் குத்தி அரிசியாக்கும் தொழில் நடக்கும் இடம்; the place where the paddy is pounded.

     [நெல் + குற்று சாலை. குத்து → குற்று. சாலை = இடம்]

திருக்கோயில்களில் திருவமுது படைக்கத் தேவைப்படும் அரிசிக்குரிய நெல்லைத் தூய்மையுடன் குத்தி அரிசியாக்கித் தரும் தொழில் நிகழும் இடம். இதனை நெற்குறுசாலை என்றும் கல்வெட்டுக்களில் காணலாம். நெற்குறு சாலை பார்க்க. குறு – குற்று (கல்.அக.);.