நெல்குத்து-தல்

நெல்குத்து-தல் nelkuddudal,    5செ.குன்றாவி. (v.t.)

   நெல்லை உரலிலிட்டு உலக்கையால் குத்தி அரிசியாக்குதல்; to pound paddy in a mortar.

     [நெல் + குத்து-தல்]

நெல்லறைக்கும் ஆலை வருவதற்கு முன் நெல்லை உரலிலிட்டு உலக்கைக் கொண்டு கையால் குத்தியே அரிசி எடுத்துச் சமைத்து உண்டனர். இவ்வாறு எடுக்கப்படும் அரிசியில் உயிர்ச்சத்துகள் அதிகம் இருக்கும் என்பர் அறிவியலாளர்கள்.