நெற்றெடு

நெற்றெடு1 neṟṟeḍuttal,    4. செ. குன்றாவி, (v.t.)

   நெற்றையுதிர்த்து விதையெடுத்தல் (வின்.);; to shell dried beans for seed.

     [நெற்று + எடு-தல்]

அவரை, முருங்கை, கொத்தவரை, பீர்க்கு சுரை போன்றவற்றின் நெற்றை உதிர்த்து விதை எடுத்தல்.

 நெற்றெடு2 neṟṟeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   விதை சேர்த்து வைத்தல் (இ.வ.);; to collect seeds.

அவரையின் நெற்றெடுத்து வைத்தான்.

     [நெற்று + எடு-த்தல்]