நெற்று

நெற்று1 neṟṟudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. மோதுதல்; to thrust, dash.

என்னைச் சுவரில் நெற்றினான்.

   2. இலக்கில் தட்டுதல் (வின்.);; to strike a mark, as with balls.

   3. இடறுதல்; to stumble.

   தெ.நெட்டு, கோண்.நத்தாநா;குட.நேட்ட. (nētt);

     [ஏற்று-தல் → நெற்று – தல், எற்றுதல் = மோதுதல், எறிதல், அடித்தல்]

 நெற்று2 neṟṟudal,    5 செகுன்றாவி, (v.t.)

   பெறுதல் (பாண்டி.);; to attain as an end.

 நெற்று3 neṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   முதிர்தல்; to mature, ripen.

     [நெறி1-தல். → நெற்று-தல்.]

 நெற்று4 neṟṟu, பெ. (n.)

   1. தேங்காய் முதலியவற்றின் முதிர்ந்து காய்ந்த காய்; a dried, mature seed or nut.

     “வாகை வெண்ணெற் றொலிக்கும்” (குறுந். 7);.

தேங்காய், நெற்றுகாயாகப் பார்த்து வாங்கிவா.

     “நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்” (குறுந் 39);.

     “அத்த வாகை அமலை வால் நெற்று” (குறுந் 369);.

     “வாடல் உழிஞ்சில் விளை நெற்று அந்துனர் ஆடுகளப் பறையின் அரிப்பன வொலிப்ப” (அகநா.45);.

     “சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து ஊழ்உறு விளைநெற்று உதிரக் காழியர் கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழியக் களரி பரந்த” (அகநா. 89);.

     “ஒள்ளினர்ச் சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளை நெற்று அறை மிசைத் தாஅம் அத்தம் நீளிடை” (அகநா.115);.

     “பெருநீர் மேவல் தண்ணடை எருமை இரு மருப்பு உறழும் நெடுமாண் நெற்றின் பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை” (புறநா. 297);.

     “முற்றற் சிறு மந்தி முற்பட்ட தந்தையை நெற்றுக் கண்டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக் குற்றிப் பறிக்கும் மலைநாட.” (நாலடி. 237);.

   2. நெறிப்பு (இலக். அக.);; stiffness.

   3. உலர்ந்த பழம்; dry-fruit.

     “நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற” (கந்தரல. 58);.

     [நெறி → நெறு → நெறு1 – நெற்று.

   1. மீண்டும் முளைப்பதற் குரிய அளவில் முற்றிய காய்.

   2. வேர்க்கடலை போன்றதின்முதிர்வு.

   3. தேங்காய்,

பீர்க்கு முதலியவற்றின் காய் முதிர்ச்சி.

   4. உலர்ந்த பழம்]