நெற்றுக்குவிடு-தல் neṟṟukkuviḍudal, 18. செ. குன்றாவி, (v.t.)
மரஞ்செடிகளில் காயை விதைக்காக முதிர்ந்துலரவிடுதல் (வின்.);; to let nuts and berries to mature and run to seed.
முருங்கைக்காய் நான்கை நெற்றுக்கு விட்டுவை.
[நெற்று → நெற்றுக்கு + விடுதல்.]
விதை எடுப்பதற்காக பறிக்காமல் மரத்திலேயே விட்டு வைத்தல். இப்படி விடப்படும் காய் நன்கு முற்றி பழுத்து விளைந்து நல்ல விதையைக் கொடுக்கும். விதைக்காய், விதை நெல்லு என்ற உலக வழக்கும் உண்டு. அவரை, வெண்டை, கொத்தவரை, முருங்கை, பீர்க்கு, கரை போன்றவை நெற்றுக்கு விடும் காய் வகைகளில் சில.