நெற்றியெலும்பு

நெற்றியெலும்பு neṟṟiyelumbu, பெ.(n.)

   நெற்றியிலுள்ள எலும்பு; bones of the forehead-Osfrontis.

மறுவ: நெற்றியோடு

     [நெற்றி + எலும்பு]

எலும்பு : முதுகெலும்புள்ளவற்றின் மென்மையான தசை, நாம்பு முதலிய இழைமங்களுக்கும் (திசுக்களுக்கும்);, மூளை, கண், இதயம் போன்ற உறுப்புகளுக்கும் பற்றுக்கோடாகவும், பாதுகாப்பாகவும் உள்ள உறுதியான அகச்சட்டகம். மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.

   உருவமைப்பைக் கொண்டு எலும்புகள், நீண்ட எலும்பு, குட்டை எலும்பு, தட்டை எலும்பு, வளைவு எலும்பு என நான்குவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கை, கால்களில் உள்ளவை நீண்ட எலும்புகள்;மணிக்கட்டு, கணுக்கால்களில் உள்ளவை குட்டை எலும்புகள். தோள்பட்டை எலும்பு, இடுப்பு எலும்பு, மண்டை எலும்புகள் தட்டை எலும்புகள். முதுகெலும்பிலுள்ள முள்ளெலும்புகளும் vertebral தலையிலுள்ள சில எலும்புகளும் வளைவு எலும்புகள்.

மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 206.

   1. முதுகெலும்புத்தொடர் – 26.

   2. தலையெலும்புகள் – 29

   3. விலா எலும்புகள், மார்பெலும்பு – 25

   4. கை எலும்புகள் – 64

   5. கால் எலும்புகள் – 62.

தலையில் மண்டை, முகம் என இரு பகுதிகள் உண்டு. இவற்றில் நெற்றி எலும்பு ஒன்றும், சல்லடை எலும்பு ஒன்றும், ஆப்பு எலும்பு ஒன்றும், மண்டைப்பக்க எலும்பு இரண்டும், பின் மண்டை எலும்பு ஒன்றும், மூக்கு எலும்பு இரண்டும், பொட்டு எலும்பு இரண்டும், கீழ்மூக்குச் சங்கெலும்பு இரண்டும், கொழுவெலும்பு ஒன்றும், மேல்தாடையெலும்பு இரண்டும், கன்னவெலும்பு இரண்டும், கீழ்த்தாடையெலும்பு ஒன்றும் என இருபத்திரண்டு எலும்புகள் உள்ளன. கீழ்த்தாடை எலும்பைத் தவிர அனைத்து எலும்புகளும் அசையாமலும் பிரியாமலும் இணைக்கப்பட்டுள்ளன.

முதுகுத்தண்டு, எலும்புக்கூட்டின் அச்சாகும். உடலில் உள்ள மற்ற எல்லா எலும்புகளும் நேரிடையாகவோ வேறு எலும்புகளின் வழியாகவோ இதனுடன் இணைந்திருக்கின்றன. இதில் 25 எலும்புகள் உள்ளன. முதுகெலும்பின் மேற்புறத்தில் 24 தனி முள்ளெலும்புகள் உள்ளன. கழுத்தில் ஏழு முள்ளெலும்புகள் உள்ளன.

மார்புப் பகுதியில் 12 முள்ளெலும்புகள் உள்ளன. மார்பின் இருபுறமுள்ள விலா எலும்புகள் அவற்றோடு பொருந்தியுள்ளன. 12 இணைப்பழுவெலும்புகளில், முதல் ஏழு இணைகள் முன்மார்பிலுள்ள குருத்தெலும்புடன் பொருந்தியுள்ளன. எட்டாம் பழுக்குருத்தெலும்பு ஏழாம் பழுக்குருத்தெலும்புடனும், 9 ஆவது எட்டுடனும், பத்தாவது ஒன்பதாவதுடனும் சேர்த்துள்ளன. 11, 12 ஆம் பழுவெலும்புகள் மட்டும் சேராமல் மிதக்கும் பழுவெலும்புகளாக உள்ளன. அனைத்தும் ஒரு கூண்டு போல் அமைந்துள்ளன. இக்கூண்டினில் இதயம்) நெஞ்சாங்குலை நுரையீரல் போன்றவை காப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தோள்முதல் முழங்கை வரையில் மேற்கை எலும்பு ஒன்றும், முன்கைப்பெருவிரல் பக்கமாக ஆரை எலும்பும், சிறுவிரல் பக்கமாக முழங்கை எலும்பும், ! மணிக்கட்டில் எட்டுச் சிறு எலும்புகளும், உள்ளங்கையில் ஐந்து நீண்ட எலும்புகளும், பெருவிரலில் இரண்டும், மற்ற விரல்கள் ஒவ்வொன்றிலும் மூன்றும் என முப்பது எலும்புகள் கையில் உள்ளன.

தொடை எலும்பு உடலில் உள்ள மற்ற எலும்புகளை விடப்பெரியது. கணுக்காலில் ஏழும், பாதத்தில் ஐந்தும், விரல்களில் 14 உம் என இருபத்தாறு எலும்புகள் உள்ளன.