நெற்றியிற்கல்வை-த்தல்

நெற்றியிற்கல்வை-த்தல் neṟṟiyiṟkalvaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   நெற்றியிற் கல்லேற்றித் தண்டித்தல் (வின்.);; to torture by placing a stone weight on the forehead, as a punishment.

     [நெற்பயில் + கல்வை-த்தல்.]

சேரன் செங்குட்டுவன் கனக விசயர் தலையில் கல்லேற்றிக் கொண்டு வந்து கண்ணகிக்குக்

கோயில் கட்டினான். நெற்றியில் கல்லேற்றித்தண்டித்தல் என்பதில் நெற்றி என்பது தலையையும் குறித்திருக்கலாம். தலையிலோ நெற்றியிலோ கல்லை வைத்துத் தண்டிக்கும் பழக்கம் சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது.

     “வடபே ரிமயத்து வான்றரு சிறப்பிற் கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின் சினவேன் முன்பிற் செருவெங் கோலத்துக்கனக விசயர்தங் கதிர்முடியேற்றி” (சிலப்.27:1-4);.