நெற்றிமுட்டு

நெற்றிமுட்டு neṟṟimuṭṭu, பெ. (n.)

   1. நேர்சுருக்குவழி; short, direct course or way.

நெற்றிமுட்டு வழியாக விரைந்து வந்தான்.

   2. நெற்றிக்கை, 2 பார்க்க;see nerri-k-kai.

   3. கைமரத்தினடி; lower end of a rafter.

   4. திடீரென ஒருவரையொருவர் இடித்துச் சந்திகை (இ.வ.);; sudden meeting of two persons face to face.

     [நெற்றி + முட்டு முட்டு = தடை, குறைவு, முட்டிக்கொள்வது]