நெற்றிப்பொட்டு neṟṟippoṭṭu, பெ. (n.)
1. நெற்றி ஒரத்திற்கும் காதிற்கும் இடையே உள்ள பகுதி; temple of the forehead.
நெற்றிப் பொட்டில் அடித்ததால் இறந்துவிட்டான்.
2. நெற்றியில் வைக்கும் பொட்டு; mark on the forehead, as of sandal or vermilion.
[நெற்றி + பொட்டு. பொட்டு =
1. நெற்றியில் வைக்கும் பொட்டு.
2. பொன்னால் செய்த ஒரு வகைத்தாலி.
3. ஒருவகை அணி, பொட்டுமனி சிறுபெண்கள் கழுத்தில் அணிவர். 4, கன்னத்தின் மேல் இணைப்பு.]
இசைவேளாளர் குடும்பப் பெண்டிரைக் கோவிலுக்கு நேர்ந்துவிட, பொற் காசை நெற்றியில் பொட்டாகக்கட்டி ஆடல், பாடல் வளர்ச்சிக்கு விடுவர்.