நெற்றிப்பால் neṟṟippāl, பெ. (n.)
வெப்பத்தைக் குறைக்க நெற்றியில் பற்றுப் போடும் முலைப்பால்; women’s breast milk as a liniment to the forehead. It is reduces the temperature. (சா.அக.);.
[நெற்றி + பால்.]
காய்ச்சலின் கடுமையைக் குறைக்க முலைப்பாலைத் துணியில் நனைத்து நெற்றியில் போட்டுப் போட்டு எடுப்பர். இவ்வாறு செய்வதால் காய்ச்சலின் கடுமை குறையும் என்பர்.