நெற்றிப்பற்று neṟṟippaṟṟu, பெ. (n.)
தலைவலி, மண்டைக்குத்தல் முதலிய நோய்களுக்கு நெற்றியில் போடும் மருந்துப்பற்று; an ointment, or liniment or paste applied to forehead in cases of headache cold, neuralgia and other nervous effections. (சா. அக.);
கிராமங்களில் தலைவலிக்குச் சூடான கேழ்வரகுக் கூழை நெற்றிப்பற்றிடுவார்கள்.
[நெற்றி + பற்று. பற்று = பசை, கட்டு, மருந்துப்பூச்சு.]
உடலில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்க, நெற்றியில் மஞ்சள், கண்ணாம்பு, பச்சிலை, கூழ்வகைகள், மருந்துவகைகள் முதலியவற்றால் பற்றிடுவது பழைய வழக்கம்.