நெற்றிப்பட்டம்

நெற்றிப்பட்டம்1 neṟṟippaṭṭam, பெ. (n.)

   நுதலிலணியும் பட்டம் (வின்.);; thin plate of metal worn on the forehead, as an ornament or badge of distinction.

     “முன்னோ னெடுந்துளைக் கைப்பிடித்தேறி நெற்றிப்பட்டத் துலவி” (சேதுபு. கடவுள்வா. 5);.

     [நெற்றி + பட்டம், பட்டம் = சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு மாதர் நுதலணி, பட்டையான

துண்டு.]

 நெற்றிப்பட்டம்2 neṟṟippaṭṭam, பெ. (n.)

   திருமணத்தின் போது பெண்ணுக்குத் தாய்மாமன் முறையினர் நெற்றியில் கட்டும் தங்கத்தினாலான சிறிய (நீண்ட); தகடு; a thin gold plate worn on the forehead by maternal uncle.

மறுவ, நெத்திப்பட்டம்.

     [நெற்றி + பட்டம்.]

மாமன் முறையாளர் தமக்கை மகளுக்கோ தங்கை மகளுக்கோ திருமணத்தின் போது கட்டும் (பட்டம்); பொற்காசு.

தாய்மாமனால் கட்டப்படுவது அம்மான் பட்டம் எனவும், நாத்திகளால் கட்டப்படுவது நாத்திப்பட்டமெனவும், மாமியால் கட்டப்படுவது மாமிப்பட்டமெனவும், பெயர்பெறும். பட்டம் பொற்காசுகளாகவும் இருக்கும். தமிழர் திருமண விழாவில் இஃது ஒரு முதன்மையான நிகழ்வு