நெற்றிச்சுட்டி

நெற்றிச்சுட்டி neṟṟiccuṭṭi, பெ.(n.)

   1. மகளிரும் குழந்தைகளும் அணியும் நுதலணிவகை; an ornament worn on the forehead by women and children.

மகளுக்கு நெற்றிச்சுட்டி வாங்கி வந்தார்.

   2. விலங்கின் நெற்றி வெள்ளை; blaze on the forehead of an animal.

நெற்றிச்சுட்டி உள்ள மாட்டைப் பிடித்து வா.

     [நெற்றி + சுட்டி. சூட்டி → சுட்டி = நெற்றியணி விலங்குகளுக்கு இருக்கும் வெண் சுழி, நெற்றிப்பட்டம். நெற்றிச்சுட்டி= பெண்கள் தலையில் அணிந்து வகிடுவழியாக நெற்றியில் தொங்கவிட்டுக் கொள்ளும் சங்கிலியோடு கூடிய வில்லை. இதைத் திவாக

நிகண்டு கடிகை எனக்குறிக்கிறது.]

     [P]