நெற்றிக்கை neṟṟikkai, பெ. (n.)
முன்படை; van of an army.
“இவற்றுக்கெல்லாம் நாம் நெற்றிக் கையன்றோ” (ஈடு, 7. 7:7);
2. மேற்கூரை தாங்கும் எதிர்க் கைமரம் (வின்.);; couple or chevron of a roof.
[நெற்றி + கை. நெற்றி போன்று மேற் கூரையைத் தாங்கும் (கைபோன்ற); மரம்.]