நெற்றிக்குறி

 நெற்றிக்குறி neṟṟikkuṟi, பெ. (n.)

   நெற்றியிலிடும் குங்குமம் முதலியன (சூடா.);; the sectarian marks put on the forehead.

     [நெற்றி + குறி.]

சமய அடிப்படையில் நெற்றியில் குறியிட்டுக் கொள்வது இந்தியரின் வழக்கம். சிவனை வணங்குபவர்கள் நெற்றியில் திருநீற்றால் முப்பட்டை இட்டுக் கொள்வர். உடலில் மார்பு, கை, வயிறு போன்ற பகுதிகளிலும் குறியிட்டுக்கொள்வர். திருமாலை வணங்கும் மாலியர்கள், வெண்மண், செம்மண் போன்றவற்றால் நெற்றி, மார்பு, கை போன்ற இடங்களில் மூன்று செங்குத்துக்கோடுகளால் ஆன குறியிட்டுக்கொள்வர். பெண்கள் நெற்றியில் குங்குமம் (சிவப்பு); அணிவர் கைம்பெண்கள் திருநீறு அணிவர்.

     [P]