நெற்றிக்கிடு-தல்

நெற்றிக்கிடு-தல் neṟṟikkiḍudal,    18 செ. குன்றாவி. & 20செ.கு.வி. (v.t. & v.i.)

   நெற்றியில் திருநீறு, திருமண் முதலியவற்றால் குறியிடுதல்; to put sectarian marks on the forehead.

நாள்தோறும் நெற்றிக்கிட்டுக் கொண்டுதான் வெளியில் செல்வார்.

     [நெற்றிக்கு + இடு-தல்.]

சிவனியர்கள் நெற்றியில் திருநீற்றால் கிடையாக மூன்றுபட்டைகளும், மாலியர்கள் செங்குத்தாக வெண்மண்ணாலும், காவியாலும் மூன்று கோடுகளும் இட்டுக்கொள்வர். இக்கால அரசியல்கட்சிகள் வேட்டிக்கரையில் வண்ணக்கோடு காட்டுவது நெற்றிக்கிடுதலின் மாற்றமே.