நெற்போர்

நெற்போர் neṟpōr, பெ. (n.)

கடாவடி அடிக்காத வைக்கோற் போர் (பிரபுலிங், மாயை. உற்.15);

 large stack of half-thrashed sheaves of paddy.

     [நெல் + போர். போர் = கதிர் வைக்கோ களின் குவியல். நெற்குவை (சூடா.);]

     “மாடுகட்டிப் போர் அடித்ததால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போர் அடிக்கு அழகான தென்மதுரை” (நாட்புற.); போர் என்பது சண்டையைக் குறிப்பது. பொரு → போர் என்று உணர்க. பொருந்துதல் என்னும் தொழிற்பெயரின் பகுதி. பொரு → போர் என வைக்கோல் போரையும் படைக்களப் போரையும் நடிப்புக் காட்சியையும் குறித்து வருதல் அறிக.