நெற்குறுசாலை neṟkuṟucālai, பெ. (n.)
நெல்லைக் குத்தி அரிசியாக்கும் இடம்; a hall is alloted to pound the paddy.
“உடையார் திருவொற்றியூருடைய நாயனார்க்கு நெற்குறுசாலைக்கு நெற்குற்றக் கொண்டு விட்ட பெரிய நாச்சியையும் இவள் மகள் மாளியையும் (தெ.க.தொ.4:558);.
[நெல்குத்தும் சாலை → நெல்குற்றுச் சாலை → நெற்குறுசாலை.]
திருக்கோயில்களில் திருவமுதுக்குரிய நெல்லை நாள்தோறும் அளவுப்படி குத்தி அரிசியாக்கித் தரும் தொழிற்சாலை. இச்சாலையில் நெல் குற்றுதற்கு நிலையாகப் பெண்கள் அமர்த்தப் பெறுதல் வழக்காம். (கல்.அக.);.
நெற்குறுசாலை neṟkuṟucālai, பெ. (n.)
நெல்லைக்குத்துமிடம் (தெ.க.தொ. 4, 188);; place where paddy is husked.
[நெல் + குறு + சாலை. குற்று → (குத்து); → குறு. சாலை = இடம்.]