நெற்குன்றவாணர்

 நெற்குன்றவாணர் neṟkuṉṟavāṇar, பெ. (n.)

   ஒட்டக்கூத்தர் காலத்துத் தமிழ்ப்புலவர்; a Tamil poet lived in Ottakkuttar period.

     [நெற்குன்றம் + வானர். வாணன் → வாணர். வாழ்நன் → வாணன் = ஊர்க்காக வாழ்பவன்]

இவர் புலவராக இருந்ததோடு வள்ளலாகவும் இருந்திருக்கிறார். நம்பிகாளி என்னும் புலவருக்குப் பொருள் கொடுத்ததோடு அவர் புலமைக்கு அடிமைப்பட்டேனென்று சிறப்புக் கவியுங் கொடுத்தவரென்று தமிழ்நாவலர் சரிதை கூறும். இவர் திருப்புகலூர் சிவன் மேல் அந்தாதி நூலொன்றும் பாடியுள்ளார். அந்நூலின் இறுதியில் களப்பாளன் நெற்குன்ற வாணன் என்ற குறிப்பிருப்பதால் இவர் களப்பாள மரபினர் என்பது தெரிகின்றது. திருப்புகலூர்ச் சிவன் கோயிற் கல்வெட் டொன்றில், நெற்குன்றங் கிழார் அரையன் கருவுணாயகரான களப்பாள ராஜர் செய்வித்த சாலை என்று குறிப் பிட்டிருப்பது நெற்குன்ற வாணரை யேயாம் என்று சாசனத்தமிழ்க் கவி சரிதம் கருதுகிறது. இங்குக் குறித்த நெற்குன்றம் காஞ்சிமாவட்டத் (செங்கல் பட்டு மாவட்டம்); தில் சென்னைக் கருகில் உள்ளது.