நெற்குத்தகை

 நெற்குத்தகை neṟguttagai, பெ. (n.)

   நெற்பாட்டத்துக்கு அடைக்குங் குத்தகை; lease of land in which paddy is payable as rent.

நிலத்தை நெற்குத்தகைக்கு விட்டு விட்டான்.

     [நெல் + குத்தகை. குல் + தகை – குத்தகை = குறுகிய கால ஒப்பந்தம். உரிமையாளரோ நிருவாகமோ ஒரு வருக்கு நூதர்தல் உரிமையை அளித்துத் தன் பங்கைத் தவசமாகவோ பனமாகவோ பெற்றுக் கொள்ளும் சட்டவழியான ஒப்பந்தம், நெற்குத்தகை = நெல்லைக் குத்தகைப் பொருளாகப் பெறுதல்.]