நெற்களஞ்சியம்

நெற்களஞ்சியம் neṟkaḷañjiyam, பெ. (n.)

   1. நெல்லிட்டு வைக்கும் புரை (உ. வ.);; granary for paddy.

பழங்கால வீடுகளில் நெற்களஞ்சியம் இருக்கும்.

   2. நெல் அதிகம் விளையும் இடம்; place where paddy is cultivated in abundance.

தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம்.

     [நெல் + களஞ்சியம். களஞ்சியம் = தவசம் சேமித்து வைக்கும் இடம், கலம், கருவூலம், சரக்கறை, பண்டசாலை, குறைந்தளவு நெல்லைச் சேமிக்குமிடத்தை குழுமை என்றும் அழைப்பர் கலைபற்றிய செய்திகள் சேமித்து வைக்கும் இடம், பொத்தகக் கலைக்களஞ்சியம் எனப்படும். சொற்கள் பற்றிய விரிவான்

விளக்கங்கள் அனைத்து

மொழிகளிலும் தொகுக்கப்பட்டுக்

கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டு

வருகிறது.]