நெற்கணக்கு neṟkaṇakku, பெ. (n.)
நெல்லளவை வாய்பாடு (யாழ்.அக.);; table of dry measure for paddy.
இப்போதைய வாய்பாட்டுநூலில் நெற்கணக்கு வாய்பாடு இல்லை.
[நெல் + கணக்கு. குள் → கள் → கண் → கண → கனகு → கணக்கு = அளவு, எண், தொகை, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முதலிய
அளவீடு. அதற்கொரு கணக்கில்லை, கணக்கு வழக்கற்றுக் கிடக்கிறது என்னுந்தொடர்களில், கணக்கு என்னுஞ் சொல் அளவைக் குறித்தல்காண்க. நெல் தமிழ்நாட்டில் முகத்தலளவைக்கும், நிறுத்தல் அளவைக்கும் அடிப்படைப் பொருளாக இருந்திருக்கின்றது.]
முகத்தலளவை
360 நெல் = 1 செவிடு (செவி+இடு);
5 செவிடு = 1 ஆழாக்கு (அரை உழக்கு → ஆழாக்கு);
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
3 உழக்கு = மூவுழக்கு
2 உரி = 1 நாழி
8 நாழி (படி); = 1 குறுணி (மரக்கால்);
2 குறுணி = 1 பதக்கு
3 குறுணி = 1 முக்குறுணி
2 பதக்கு (4 குறுணி); = 1 தூணி
2 தூணி = 8 குறுணி (குறு + உணி);
3 தூணி = 1 கலம்
5. மரக்கால் = 1 பறை
80 பறை அல்லது 400 மரக்கால் = 1 கரிசை நிறுத்தலளவை
1 நெல்லெடை = 1 வீசம் (வீசு + அம்);
2 வீசம் = 1 பிளவு
2 பிளவு = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி (மஞ்சு+ஆடி);
2 மஞ்சாடி = 1 பணவெடை
5 மஞ்சாடி = 1 கழஞ்சு
2 கழஞ்சு = 1 கஃசு (1/4 பலம்);
4கஃசு = 1 பலம்
100 பலம் = 1 தூக்கு
2 தூக்கு = 1 துலாம்
32 துலாம் = 1 பாரம்
2 துலாம் = 1 பிசு
32 குன்றிமணி = 1 வாரகனெடை
9 வராகனெடை = 1 ஒஞ்சை
9 ஒஞ்சை = 1 சேர்
16 மஞ்சாடி = 1 வாரகனெடை
9 பணவெடை = 1 பூவராகன்
10 பணவெடை = 1 கழஞ்சு
10 பணவெடை = 1/8 ரவை மஞ்சாடி 1 கழஞ்சு பழகம்
10 1/2 மாத்துடையது = தங்கம்
3 1/2 மாத்துடையது = வராகன்
1/16 வராகனெடை= iரதி(பச்சை);
பழந்தமிழ்நாட்டில் இதே முகத்தல், நிறுத்தல் அளவைகளைக் கொண்டு அனைத்து வகைக் கூலங்களும் அளக்கப்பட்டன.
நெற்கணக்குப் போலவே குதிரைக் கணக்கு ஒனான் கணக்கு யானைக் கணக்கு அடிகணக்கு, வெற்றிலைக் கணக்கு, நெல் விற்பனைக்கணக்கு பால்கணக்கு, முத்துக்கணக்கு, களவுகணக்கு, எண்ணெய்க் கணக்கு, மிளகு கணக்கு, பலகாரந் தின்ற கணக்கு மாம்பழக்கணக்கு, விளம்பழக் கணக்கு கற்பூரக் கணக்குப் போன்றவை களும் இருந்தன. (கணக்கதிகாரம்);.