நெறுநெறெனல் neṟuneṟeṉal, பெ. (n.)
1. ஓசைக்குறிப்பு; crashing sound.
“நெறுநெ றெனக்கொடு நிலவறையிற்புக நெடியவன்” (பாரத. கிருட்டின. 191);.
2. முறிதற் குறிப்பு; snapping or breaking sound.
“அகர நிறைகளவை நெறுநெறென வெறிய” (திவ்.பெரியதி 5:10:4);.
[நெறுநெறு + எனல்]