நெறுநெறு-த்தல்

நெறுநெறு-த்தல் neṟuneṟuttal,    4 செ. கு. வி. (v.i.)

   1. பல்லைக் கடித்தல்; to nash one’s teeth.

அச்சமிகுதியால் நெறு நெறுவென்று பல்லைக் கடித்தான்.

   2. ஒலிபடப் பிளவுறுதல்; to snap, as a stick in breaking.

முருங்கைமரம் நெறுநெறுவென முறிந்தது.

   3. உறுமுதல்; to growl, rumble.

   4. நெரிந்தொலித்தல்; to sound as the biting of a hard, brittle or crispy substance.

     [நெறு = ஒசை. நெறு + நெறு – நெறுநெறு → நெறுநெறு-த்தல்.]