நெறியிருங்கதுப்பு

நெறியிருங்கதுப்பு neṟiyiruṅgaduppu, பெ. (n.)

   நெறிப்பினையுடைய கரிய கூந்தல்; long, flowing tresses of a woman.

     “நெறியிருங் கதுப்பொடு பெருந்தோணிவி” (குறுந். 190);.

     “நுண்ணறல் கடுக்கு நெறியிருங் கதுப்பினென் பேதை” (அகநா. 35);.

     “நெறியிருங் கதுப்பும் நீண்ட தோளும்” (நற். 387);.

     [நெறி + இரும் + கதுப்பு. நெறி = வளைவு சுருள். இரும் = இருண்ட, கரிய. கதுப்பு = கூந்தல், தலைமயிர்.]