நெறிமை

நெறிமை neṟimai, பெ. (n.)

   1. முறை (விதி);; rule.

     “நிதியினை… நெறிமையால் நினைய வல்லார்” (திவ். திருக்குறுந். 1);.

     “நெறிமையினான்காய் வருநிரையசையே” (யா.கா.உறுப்.2. உரை);

   2. நன்னெறி; rectitude honesty.

   3. வழக்கு; usage, literary usage.

     “எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை இன்மை யான” (தொல். பொருள். 35);.

     [நெறி → நெறிமை]