நெறிமுதல் neṟimudal, பெ. எ. (adj.)
வழியின் கண்ணே உள்ள; way side.
“குறுநடை பலவுள் ளலமே நெறிமுதல் கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி” (குறுந்.209);.
“நீர்மருங் கறியாது நேர்மருங் கோடி யறுநீ ரம்பியி னெறிமுத லுணங்கு”(அகநா. 29:18);.
“பரலவல் படுநீர் மாந்தித் துணையோ டிரலை நன்மா னெறிமுத லுகளும்” (குறுந் 250:2);.
[நெறி + முதல். நெறி = வழி.]