நெறிமாணவையம்

நெறிமாணவையம் neṟimāṇavaiyam, பெ. (n.)

   அறத்தைத் தெளியவுணர்ந்த ஒழுக்கத்தில் சிறந்த அவைக்களம்; assembly of gracious persons.

     “அறமறக் கண்ட நெறிமா னவையத்து” (புறநா.224);

     [நெறிமாண் + அவையம். நெறிமான் → நெறிமாண். நெறிமாண் = அறங்கூறும் அவை]