நெறிமருப்பு neṟimaruppu, பெ. (n.)
எருமை மான் முதலியவற்றின் முடங்கின கொம்பு; curved horn.
“நெறிமருப் பெருமை” (ஐங்குறு.91:1);.
“துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு, ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்து” (அகநா.3162);
[நெறி1 + மருப்பு. மருப்பு = கொம்பு. கலைமான் என்னும் ஆண்மான் நெறிமருப்பு உடையது.]