நெறிப்பு

நெறிப்பு1 neṟippu, பெ. (n.)

   1. புருவத்தை வளைக்கை; knitting of the brows.

     “பேரண்ட மனைத்தும் புருவச்சிறு நெறிப்பாற் குமைக்கும் பெருமான்” (விநாயகபு. 33:13);.

   2. நிமிர்ந்திருக்கை; standing erect, bristling, stiffness.

   3. செருக்குக் கொள்கை (அகங்ரிக்கை); (வின்.);; insolence, haughtiness.

     [நெறி2 → நெறிப்பு.]

 நெறிப்பு2 neṟippu, பெ. (n.)

   1. சிலிர்ப்பு; sprouting.

   2. முரிப்பு; break: (சா.அக.);

   3. பெண்டிரின் மயிர் நெறிப்பு; curl and woman’s hair.

     [நெறி → நெறிப்பு.]