நெறிப்பிறழ்வு neṟippiṟaḻvu, பெ. (n.)
கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறையில் இருந்து மாறுகை; delinquency.
[நெறி + பிறழ்வு. நிற்க வேண்டிய, கடை பிடித்து நடக்க வேண்டிய முறையினின்று தவறுகை.]
முற்காலத்தில் நெறிப்பிறழ்வு என்பது அறவழிதவறி நடக்கும் நடத்தை என்றும், அதற்குச் செய்ய வேண்டியது தண்டனை தருவது ஒன்றே என்றும் கருதப்பட்டு வந்தது. நாளடைவில் பலவகைக் கரணியங்கள் அறியப்பட்டன. இந்தக் கரணியங்களை மரபு நிலையின (Heridatary); என்றும், சூழ்நிலையின (Environmental); என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவை யிரண்டும் ஒன்றொடுஒன்று தொடர்புடையன. ஒன்றையொன்று மாற்றுவன.
சூழ்நிலையில் வீட்டுநிலைமை, பாட சாலையில் கற்றவை, அக்கம்பக்கத்து நிலைமை, பொருளியல் நிலைமை, கற்கும் விளையாட்டுகள், சேரும் நண்பர்கள் ஆகியவை அடங்கும்.
வறுமையும் நெறிப்பிறழ்வுக்கு ஒரு முதன்மைக் கரணியம். வறியவர் வீட்டுக் குழந்தைத் திருடவாய்ப்பிருக்கிறது.
ஆளுமை பற்றிய நெறிப்பிறழ்வு கரணியம் இருவகைப்படும். உடல்பற்றியவை: உள்ளம் பற்றியவை.
உடல்பற்றியவையின் குடிவழியில் (பாரம்பரியம்);, உடற் குறைகள், சுரப்புக்களின் குறைகள் என்பன அடங்கும். இவற்றால் மட்டுமே நெறிப்பிறழ்வு உண்டாகிவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நல்ல இயல்புகள் இல்லாதபோது இவை மிகுந்த முதன்மையான கரணியங்களாக ஆகிவிடுகின்றன.
உள்ளம் பற்றியவை என்பன உள்ளத்தில் உண்டாகும் முரண்பாடுகளும், அவற்றால் உருவாகும் ஆளுமைப் பண்புகளுமாம். மனிதனுக்குப் பாதுகாவல், அன்பு, மதிப்பு போன்ற பல தேவைகள் உள்ளன. அவற்றை முழுமை செய்யாவிடில் அவை முழுமையாக வேறுவழிகளைத் தேடும்.
ஆளுமைப்பண்பும் (personality); முதன்மை யானது. ஆளுமைப்பண்பை உளவியலார் புறமுகன் textrovert); srsirgjith, gjengpässir (introvert); sisirglih இருகூறாகப் பிரிந்துள்ளனர். புறமுகன் உரத்தகுரலில் வெளிப்படையாகப்பேசி, நண்பரோடு சேர்ந்து இயங்கி, ஊரில் இன்ப நிகழ்ச்சியோ, துன்ப நிகழ்ச்சியோ நடந்தால் பங்கேற்பான். அகமுகன் இப்பண்புகளுக்கு மாறானவனாக இருப்பான். இருவரும் தம் பண்பில் வழிமாறினால் நெறிப்பிறழ்வே குடும்பத்திலும், சூழ்நிலை யிலும் ஏற்படும் குறைகளால் ஆளுமை வளர்ச்சிக்குத் தடை உண்டாகுமாயினும் நெறிப்பிறழ்வு தோன்றும்.
நெறிப்பிறழ்வைத் தடுப்பதற்குப் பெற்றோர்கள் தக்க கல்வி தருவது இன்றியமையாததாகும். எந்த வகையிலும் நெறிப்பிறழ்வு உண்டாகாமல் தடுப்பது குமுகாயத்தின் முதற் கடமையாகும். நெறிப்பிறழ்வு உண்டாவதன் கரணியத்தைக் கண்டுபிடித்து அதை நீக்குவதற்கேற்ற செயல்களைச் செய்தல் வேண்டும்.