ஒருவழிப்பட வாராத சொல்தன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்கள். இவைஉயிரீற்றவாகவும், புள்ளியீற்றவாகவும் வரும்; குறிப்புப் பற்றியும்,இசை பற்றியும், பண்பு பற்றியும் வரும். இவை உலகவழக்கில் மருவி வருவன.இவற்றை நிலை மொழி வருமொழி செய்து புணர்ச்சிவிதி கூறவேண்டுவதுஇன்று.எ-டு : கண் விண்ண விணைத்தது, விண் விணைத்தது – குறிப்பு; ஆடைவெள்ள விளர்த்தது, வெள் விளர்த் தது – பண்பு; கடல் ஒல்ல ஒலித்தது, ஒல்ஒலித்தது – இசை; விண்ண, வெள்ள, ஒல்ல : உயிரீறு; விண், வெள், ஒல் :புள்ளியீறு.விண்ண விண், வெள்ள வெள், ஒல்ல ஒல் என ஒவ்வோர் உரிச்சொல்லும்உயிரீறாகவும் புள்ளியீறாகவும் வருதலின் ஒன்றன்கண் அடக்கலாகாமையின்,‘நெறிப்பட வாரா’ வாயின. (தொ. எ. 482 நச். உரை)