நெறிப்படு-தல் neṟippaḍudal, 20 செ. கு. வி. (v.i.)
1. ஒழுங்கு படுதல்; to be put in order, to be kept within bounds.
“நெறிப்படக் கவலசைஇ” (கலித்.9);.
“மற்றவர் குறிப்பிற் கண்டிசின் யானே நெறிப்பட வேலும் இலங்கிலை துடைப்ப” (நற்.177);.
“நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த வெறி கமழ் கொண்ட நாற்றமுஞ் சிறிய” (நற்.368);.
“கைவள் ளோரி கானந் தீண்டி எறிவளி கமழும்
நெறிபடு கூந்தல்” (குறுந் 1994);.
“நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு வளை தலைமாத்த தாழ்கரும் பாசவர்” (பதிற் 67:15);.
நெறிப்பட பொருள்களை வைக்க வேண்டும்.
2. நல்லொழுக்கத்தில் நிலைபெறுதல்; to be established in a good moral or religious course.
3. ஒன்றன் வழிப்படுதல்; to follow one’s lead.
யாற்றுப் பெருக்கின் நெறிப்பட்ட புணை.
4. உள்ளடங்குதல்; to come under one’s power or control.
[நெறி + படு-தல். படுதல் = அகப்படுதல். நிலைபெறுதல், ஒழுங்காதல் இது தன்வினை.]