நெறிநீர்

நெறிநீர் neṟinīr, பெ. (n.)

   கடல்; sea.

     “நெறிநீர் வளையும் நிழனித்திலமும்” (சீவக. 1522);.

     [நெறி + நீர்.]

உலகக்கோளத்தில் 70 விழுக்காடு பரப்பில் தேங்கியுள்ள கடல், அலையடித்தாலும் கரைகடவாது, நெறியோடு நிற்றல் காண்க. காற்றழுத்த மண்டிலத்தால் புயல் வருங்கால் நீர்கடத்தல் நெறி (விதி); விலக்கு.