நெறித்தழை neṟittaḻai, பெ. (n.)
தழை ஆடை; leaf cloth, foliage cloth.
“கொடுங்கழை நிவந்த நெடுங்கால் நெய்தல் அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ” (நற். 96);.
“அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை” (குறுந்.293);.
[நெறி + தழை. நெறிதல் = அடர்தல், நெருங்குதல்.]
நூலாடைக்கு முன்னர் மாந்தர்இலை, தழைகளை முறையாக முன்பின் திறவாமல் இருக்கும்படி கட்டிய ஆடை என்றுணர்க.