நெறிதவறிநட-த்தல் neṟidavaṟinaḍaddal, 3 செ. கு. வி. (v.i.)
முறை தவறி நடத்தல்; to behave badly.
நெறி தவறி நடந்தால் வாழ்வில் முன்னேற முடியாது.
[நெறிதவறி + நட-த்தல்]
வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய வழியில் அல்லாமல் முறைதவறிய வழியில் நடத்தல். நெறி தவறாமல் முறையான வழியில் நடப்பதால் அடையும் பயனைத் திருவள்ளுவர்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும், தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள், 50);. என்று கூறுகிறார்.