நெறிகாட்டுநாதர்

 நெறிகாட்டுநாதர் neṟikāṭṭunātar, பெ. (n.)

   திருக்கூடலையாற்றுர் இறைவன்பெயர்; a god in Thirukkudalai-y-arrür.

     [நெறி (=வழி); + காட்டு + நாதர்]

திருக்கூடலையாற்றுார் என்பது திருப்புறம்பயம், திருமுது குன்றம் இடையில் உள்ள ஊர். தேவாரப் பாடல் பெற்ற தலம். இங்குள்ள இறைவன் பெயர் நெறிகாட்டு நாதர் திருஞானசம்பந்தர் திருப்புறம் பியத்திலிருந்து திருமுது குன்றத்துக்குச் செல்கையில் எதிரில் மறையவர் கோலத்தில் வந்த இறைவனை அறியாது திருமுது குன்றத்துக்கு வழி கேட்க இறைவனும் ‘இவ்வழி திருக்கூடலை யாற்றுாருக்குச் செல்கிறது” என்றுகூறி வழி (நெறி காட்டித் தாமும் ஊரெல்லை வரை சென்று மறைந்தார் என்பர். இதனால் இவ்வூரில் உள்ள இறைவர்க்கு இப்பெயர் வந்தது. (சி.பெ.அ.);