நெர்சிறுதாலி

நெர்சிறுதாலி nerciṟutāli, பெ. (n.)

   தாலிவகை; a kind of marriage badge.

     “நெற்சிறு தாலி நிரல்கிடந்திலங்க” (பெருங். வத்தவ. 16:29);.

     [நெல் + சிறுதாலி.]

சிறுதாலி=சிறிய தாலி வகை சிறுதாலி =

   1. கணவன் வாழ்நாள் வரை மகளிர் கழுத்தில் கயிற்றுடன் எப்பொழுதுமுள்ள தாலி.

   2. வைப்பாட்டிக்குக் கொடுக்கும் தாலி. சிறுதாலிக்கட்டும் மரபு கைக் கோளரினத்தில் காணப்படுகிறது. திருமணத்திற்கிசையாத மாமன்மகள் அல்லது அத்தை மகளை விரும்பின ஒருவன், அவள் தன்னை மணம்புரியும் படி தாலியையேனும்

துணியையேனும் துரங்கும்போது அவள் கழுத்திற் கட்டுவது, சிறுதாலிகட்டுதல் எனப்படும்.

நெற்சிறுதாலி = மணவுறுதிவிழாவில் கணவர் பெயர் குறித்த ஒலையைக் காதில் தென்புற மகளிர் அணிந்தது போல வயற்புற ஊர் மகளிர் கழுத்தில் பொன்தாலி அணிவிப்பதற்கு முன் நெல் முடிச்சிட்ட தாலி கட்டப்பட்டது என்று அறிக.