நெருப்புவிழுதல் neruppuviḻudal, பெ. (n.)
1. தீப்பொறி பறக்கை (வின்.);; flying of sparks, as from fire-wood, flint or grindstone.
2. தனலுண்டாகை (உ.வ.);,
formation of live embers as in an oven.
அடுப்பில் நெருப்பு விழுந்துவிட்டது. இனி விரைவில் சமைக்கலாம்.
3. கூரைமேல் தீத்திரள் விழுகை; falling of balls of fire over roofs.
4. முறைகேடு (அநீதி); முதலியவற்றால் அழிகை; destruction, as by injustice of famine.
5. நெருப்பினா லழிகை (யாழ்.அக.);
being consumed by fire.
நெருப்பு விழுந்து துணி எரிந்து விட்டது.
5. தன்னிலை யழிகை (வின்.);; discomfiture, disheartenment.
[நெருப்பு + விழுதல். நெருப்புப் பொறி பறந்து, துணி, வீடு முதலியவற்றை அழிப்பது போல் முறையற்ற வழியில் நடப்பவனையும் அழிக்கும். தன்னிலையில் இருந்து மாறியவனையும் அழிக்கும் என்பதையும் இச்சொல் காட்டுகிறது.]